மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்களது அகவை நாளில் அவரது தலைமையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' பெருவெற்றியடைய எமது வாழ்த்துகள். தோழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!
தமிழ்நாடு சிறக்கட்டும் !!
@thirumaofficial@VCK_in@VanniTamizhVCK@VckBalaji@aloor_ShaNavas@velichamtvtamil@sinthanaivck
நயினார் நாகேந்திரன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை. தமிழ்நாடு அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்தின் காங்கிரஸ் அரசால் சுட்டுக்கொ**லை செய்யப்பட்ட 3 அப்பாவி தமிழர்களுக்கு எதிரான எல்லையோர கிராமங்களில் வெடித்திருக்கும் போராட்டம் கவனத்திற்குரியது. தொடர்ந்து கர்நாடக வனத்துறையால நெருக்கடிக்கு உள்ளான தமிழர்கள், தற்போது நடந்த பச்சைப்படுகொலைக்கு கொதித்தெழுந்து போராட ஆரம்பித்துள்ளார்கள். இப்போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடும் போராட்ட களத்தில் இறங்கியாக வேண்டும். கொ**லை செய்த அதிகாரிகள் கொ**லை வழக்கில் கைது செய்யப்பட்டவேண்டும். உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு தவெக அரசு இதுகுறித்து உடனடியாக விசாரணை கமிசனை அறிவித்து வழக்கு தொடுக்க ஆயத்தம் செய்ய வேண்டும். எதிர்கட்சிகளான திமுக, அதிமுக உடனடியாக கண்டன தீர்மானத்தை கொண்டு வருவது போராடும் மக்களுக்குஆதரவாக அமையும்.
காவிரியில் நீர் தரமறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் எதேச்சதிகார போக்கினை தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை கண்டிக்க மறுத்துவருகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோதம் மன்னிக்கக்கூடியதல்ல.
நேற்று சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இந்த தேசம், வெள்ளையர்களால் கூலிகளாக்கப்பட்டு சிதைக்கப்பட்ட 'மாஞ்சோலை தொழிலாளர்களின்' வாழ்வுரிமையை பறிக்க இன்று கிளம்பி விட்டது.
மாஞ்சோலை சிக்கல் என்பது ஒரு தனியார் கார்ப்பரேட் கம்பெனியின் லாபத்திற்காக சுரண்டப்பட்ட தொழிலாளிகளின் போராட்டம்.
இதற்கு தீர்வு என்ன?
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மீண்டும் வனத்துறைக்கு கொடுக்கச் சொல்லியுள்ளது உச்சநீதிமன்றம். இந்த தொழிலாளர்களுக்கு நட்ட ஈடு தருவது பற்றி உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்க மறுக்கிறது. மாநில அரசுகளும் (திமுக+தவெக) கார்ப்பரேட் கம்பெனியிடம் அழுத்தம் கொடுத்து நட்ட ஈட்டை பெற்றுத்தர மறுக்கிறது.
மாறாக, அரசு சார்பில் நிவாரணம் வழங்கி, தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈட்டை மறுக்கிறார்கள்.
நான்கு தலைமுறையாக மிகக்குறைந்த கூலிக்கு 2000 குடும்பங்கள் சுரண்டப்பட்டுள்ளன. கிட்டதட்ட 99 ஆண்டுகளாக இந்த சுரண்டல் நடந்துள்ளது. வெள்ளையர் காலத்திற்கு பின்னர் பாம்பே-பர்மா கார்ப்பரேசன் எனும் முகம்மதலி ஜின்னாவின் பேரனும், பிரிட்டானிய பிஸ்கெட் கம்பெனியின் முதலாளியுமான பெரும்பணக்கார நூஸ்லி வாடியாவிடம் மாஞ்சோலை உள்ளது.
நூஸ்லி வாடியாவின் மார்வாடி-பனியா பின்புலத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டை தர மறுப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரிகட்ட மறுத்து வருகிறார்.
இந்த தொழிலாளர்கள் 1960களில் கூலி உயர்வுக்காக போராடிய போது, அன்றய திமுக மாவட்ட செயலாளரும், அறிஞர் அண்ணாவும் கூலி உயர்வை பெற்றுக்கொடுத்தார்கள். ஆனால் 1990களில் அமைந்த திமுக ஆட்சி கூலி உயர்வு கேட்டவர்களை தாமிரபரணி ஆற்றில் அடித்துக் கொன்றது. இதன் பின்னர் 2021ம் ஆண்டில் மாஞ்சோலையை அரசிடம் ஒப்படைக்க வேண்டிய காலத்தில், இந்த தொழிலாளர்களைக் கொண்டு மீண்டும் தேயிலை நிறுவனத்தை நடத்தவிருக்கும் வாய்ப்பை திமுக அரசு மறுத்தது. கார்ப்பரேட் கம்பெனிக்கு உதவியாக, தனது அதிகாரிகளைக் கொண்டு தொழிலாளிகளை ஏமாற்றி 'விருப்ப பணி ஓய்வுக்கு' என படிவத்தை எழுதபடிக்க தெரியாத தொழிலாளிகளிடம் கையொப்பம் பெற்று நட்ட ஈடு தருவதை தவிர்க்க உதவி செய்தது திமுக அரசு. 30-60 லட்சம் எனும் வகையில் கொடுத்திருக்கப்பட வேண்டிய நட்ட ஈட்டை வெறும் 2 லட்சம் எனுமளவில் முடித்தது மாஞ்சோலை நிர்வாகம். இந்த கொடுமைக்கு உதவி செய்தது திமுகவின் தொழிலாளர்நல துறை அமைச்சகமும், அதிகாரிகளும். இத்தனைக்கும் மாஞ்சோலையில் இருக்கும் ஐந்து கிராமங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றது திமுக. ஆனால் 2026 தேர்தலில் பெரும்பாலான மாஞ்சோலை மக்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது.
திருநெல்வேலிக்கு வந்த அன்றய முதல்வர் திரு ஸ்டாலினை சந்திக்க வந்திருந்த மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கவிடாமல் தடுத்தனர் அதிகாரிகள். உணவு, தண்ணீர், மின்சாரத்தை துண்டித்து கார்ப்பரேட்டுக்கு வெட்கமில்லாமல் துணைபோனார் நெல்லை மாவட்ட கலெக்டர். சொற்ப பணத்தை கையில் கொடுத்து வெளியேற்றி இருக்கிறார்கள். வெறும் கையோடு அந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால், இன்றளவும் தமிழ்நாட்டு அரசுக்கு தரவேண்டிய வரி பாக்கியை தரவில்லை பாம்பே-பர்மா கார்ப்பரேசன். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு எதிராக தேயிலைதோட்ட தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் நலவாரியம், நெல்லை ஆட்சியர், காவல்துறை, அம்பை சட்டமன்ற உறுப்பினர் என அனைவரும் மக்களுக்கு எதிரான துரோகிகளாக செயல்பட்டனர் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்.
திமுகவின் மிக மோசமான தொழிலாளர் விரோத கரும்புள்ளியாக மாஞ்சோலை என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
பின்னர் ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இதுநாள் வரை மாஞ்சோலை தொழிலாளர்கள் குறித்த எவ்வித நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. சட்ட சபையில் ஏதேனும் உறுப்பினர் இதுகுறித்து கவனத்தை ஈர்த்தால் இந்த கொடுமை விவாதம் ஆகலாம். அதிமுக வழக்கம் போல வாழ்வுரிமை குறித்தெல்லாம் கவலைகொள்ளாமல் கைகழுவியது.
வெள்ளையர்களாலும், பின்னர் மார்வாடிகளாலும் சுரண்டப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக போராடாத அவமானத்தோடு நாம் வாழ்கிறோம். காலனிய காலத்து கொடுமைக்கு நீதிதரமறுத்த அதிகாரவர்க்கம், ஆட்சியாளர்கள், நீதிமன்றங்கள், வேடிக்கை பார்த்த கட்சிகள் என அனைத்தும் மண்மூடிப் போகட்டும்
விடுதலைக்காக போராடாத குழுவிடம் இந்தியா ஒப்படைக்கப்பட்ட நாள் இன்று.
இந்திய விடுதலைக்காக ஆயுதமேந்திய போராட்டத்தையும், அதிக குருதியையும் சிந்தியவர்கள் இந்தியாவின் பழங்குடிகள், பூர்வகுடிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, இசுலாமிய சிறுபான்மை மக்கள். ஆங்கிலேயரிடம் உறவாடி வணிக நலனையும், அதிகார பங்கையும் பெற்றுக்கொண்ட பார்ப்பன-பனியா கும்பலிடம் இந்தியாவின் ஆட்சி ஒப்படைக்கப்பட்ட நாள் இன்று. அண்ணல் அம்பேத்கர் ஒருவரால் மட்டுமே நாம் மனிதர்களாக அரசியல்சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டோம். தந்தை பெரியார், அண்ணல் ஆகியோரால் இடஒதுக்கீடு உரிமைகளை கண்டடைந்தோம். மற்ற தலைமைகள் எல்லாம் இந்தியாவை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தியவர்களிடத்தில் சமரசம் கண்டார்கள்.
தொழிலாளர் உரிமை, பழங்குடிகள் உரிமை, தேசிய இன உரிமை, மொழி உரிமை , பண்பாட்டு உரிமை, வாழ்வுரிமை, அரசியல் உரிமை, மாநில சுயாட்சி என அனைத்தும் நசுக்கப்பட்ட நிலையில் 'வரி கட்டும் உயிரினமாக' மட்டுமே நாம் இன்று வாழ்கிறோம்..
இதனால் தான் கருப்பு சட்டை அணிந்து தந்தை பெரியார் சொன்னார் 'இந்த நாள் ஒரு துக்க நாள்' என்று...
'மாண்டெக் சிங் அலுவாலியா'
இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திட்டல்குழு தலைவர். இன்று நாம் சந்திக்கும் பல நெருக்கடிகளுக்கு காரணமானவர். இவர் தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசகராக வருவது மிக மிக ஆபத்தானது. ஏனெனில் இவரது நடவடிக்கையாலேயே பல நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. இவரால் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் நெருக்கடிகளை கோடிட்டு காட்ட விரும்புகிறது மே17 இயக்கம். அதற்கு அடிப்படையாக, இவரால் வழிநடத்தப்பட்ட மன்மோகன்சிங அரசால் மக்களுக்கு உருவான நெருக்கடிகளை சுருக்கமாக காண்போம்.
உதாரணமாக,
பெட்ரோல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசுக் கட்டுப்பாட்டு முறையையும், அரசு மானியத்தையும் நீக்கியவர். பெட்ரோலை உலக சந்தைக்கு ஏற்ப அன்றாட விலை மாற்றத்திற்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தவர். இதனாலேயே பெட்ரோல் விலை கடுமையாக உயர ஆரம்பித்தது. கட்டுப்பாட்டில் இருந்த விலையை தன்னிச்சையாக பெட்ரோலிய கம்பெனிகள் விலை நிர்ணயம் செய்யவழிவகுத்தவர். இதன்பின்னரே கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல் விலை தாறுமாறாக விலை ஏற ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்த விலை உயர்வு இன்று வரை உயர்ந்துகொண்டிருக்கிறது. 2010 ஆண்டில் ரூ47 விலையிலிருந்து, 2013-14ல் ரூ74 எனுமளவில் உயர்ந்தது. சர்வதேச விலையுயர்வு காரணமாக சொல்லப்பட்டது. அதாவது உலக சந்தைக்கு ஏற்ப விலையை ஏற்றிக்கொள்ளலாம் எனும் வழியை உருவாக்கியவர் இவர்.
இவரது காலத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குள்ளானது.
Kirit Parikh Committee எனும் கமிட்டி அமைக்கப்பட்டது. இது விலை உயர்வை சாத்தியப்படுத்த ஆலோசனை சொன்னது. இந்த கமிட்டியின் பரிந்துரையை எற்று மாண்டெக்சிங் விலையேற்றத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார். இதனால் கேஸ் சிலிண்டர் விலை உடனடியாக ரூ100 உயர்ந்தது. இந்த கமிட்டியின் பரிந்துரையே ' சிலிண்டர் மானியத்தை குறைப்பதும், மானிய சிலிண்டரை குறைப்பதும்' ஆகும். இதையே பின்னர் மோடி அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த பரிந்துரையை கொண்டு வந்தவர் மாண்டெக்சிங்.
மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சிய்ன் ஆட்சியில் நடந்த மிகப்பெரும ஊழல்களுக்கு இவர் நடைமுறைப்படுத்திய நிர்வாக மாற்றங்கள் மிக முக்கிய காரணம்
உதாரணமாக,
நிலக்கரி, பெட்ரோலியம், சாலை, துறைமுகம், விமான நிலையங்கள் ஆகிய துறைகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் PPP (Public Private Partnership) திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் நிலக்லரி ஊழல் நடந்தது. விமான நிலையம், துறைமுகத்தில் தனியாரை அனுமதித்த இவரது திட்டத்தின் கீழாகவே அம்பானி-அதானி குழுமஙகள் இவற்றை கையகப்படுத்தின. நிலக்லரி சுரஙகத்தை தனியார் உற்பத்திக்கு கொடுக்க நடந்த பேரஙகள் இந்த்யாவிலேயே மிகப்பெரும்.ஊழலாக மாறியது. இதேபோல 2ஜி அலைக்கற்றையில் தனியார்மயத்தை ஊக்குவித்தது என பல முறைகேடுகளுக்கு காரணமாக அமைந்தது. அதிக பணபலம், அதிக கட்டுமான பலம் கொண்டவர்களுக்கு ஒப்பந்தத்தை அளிப்பது எனும் விதிமுறை இவரால் கொண்டுவரப்பட்டதால் தான் இன்றளவும் பகசூரன் கம்பெனிகளான அதானி, அம்பானி குழுமங்கள் அனைத்து ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்கின்றன.
இதுமட்டுமல்ல, 1991ம் காலத்தில் மன்மோகன்சிஙகின் சகாவாக இயஙகிய சமயத்தில் கார்ப்பரேட் வரி, வருமான வரி ஆகியவற்றை ரத்து செய்தது, குறைததது என பணக்காரர்களுக்கு சாதகமாக வரிச்சலுகையை கொண்டுவந்தார். ஏழைகள் தலையில் ஜி.எஸ்.டி வரியும்,பணக்காரர்களுக்கு வரிச்சலுகையும் கொண்டு வந்தார். இதனாலேயே கடந்த 20-30 ஆண்டுகளில் ஏழைகள்-நடுத்தர மக்களின் வருமானம் குறைந்ததும், பணக்காரர்கள் மிக அதிக பணக்காரர்களாகவும் மாறினர்.
GST வரி உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தவர் மாண்டெக் சிங்.. குறிப்பாக 5%, 12%, 18%, 24% வரிக்கட்டமைப்பை உருவாக்கியவர். குறிப்பாக 5% வரி எனும்.குறைந்த பட்ச வரியை நீக்க வேண்டுமென்றவர். ஒரே அளவாக 14% வரியை அனைத்திற்கும் நிர்ணயம் செய்ய வேண்டுமென்றவர். அதாவது இட்லிக்கும், தோசைக்கும் கூட 14% வரி போட வேண்டுமென்றவர்
தமிழ்நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆலோசகராக வருவது மிக மிக ஆபத்தானது. தமிழ்நாட்டின் பொருளாதார கட்டமைப்பு அரசின் முதலீடுகளால் வளம்பெற்றது. இவற்றை தனியார் பணக்கார முதலாளிகள் கைவசம்.ஒப்படைக்கும்.பணியை சட்டரீத்யாக செய்து முடிக்க இவர் பயன்படுவார். ஏற்கனவே தவெக விஜய் சமர்பித்த பட்ஜெட் தனியார்மயத்தை ஊக்குவித்துள்ள வகையில் அமைந்துள்ளது. இதன் காரணம் தற்போது அம்பலமாகி உள்ளது.
இவரால் நிர்வகிக்கப்பட இருக்கும் குழுவினால் கொண்டுவரப்பட இருக்கும் மாற்றங்கள் குறித்த கான்செப்ட் நோட் என்பது
...structural transformation of the state's finances from a tax-heavy collection mindset to a proactive public asset management model... அதாவது.....
(அடுத்த பதிவில் தொடர்ச்சி)+
22 நாட்களாக போராட்டத்தை 'தாயகத்தில்' மாணவர்கள் தொடர்கிறார்கள். 11 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை 'திருவள்ளுவர்' இல்லத்தில் நடத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்கள். ஆனால் இதுவரை பெருமளவிலான தோழர்கள் இரண்டு இடங்களிலும் திரண்டு ஆதரவளிக்கவில்லை. இரு இடமும் ஏதேனும் ஒரு கட்சியின் அலுவலகம் தான், ஏனெனில் ஒன்றுகூட போராட எந்த இடத்தையும் அரசு ஒதுக்குவதில்லை. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு போராட்டத்தை நடத்தும் GenZ அரசியல் இளையோர்களுக்கு நாம் ஆதரவளித்து உற்சாகப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா ? தோழர் வேல்முருகன், மற்றும் மதிமுக, மே17 , திவிக, வளர்மதி உள்ளிட்ட வெகுசில தோழர்கள் ஆதரவளித்து உற்சாகபபடுத்தியுள்ளார்கள். ஓரிரு தோழமைகளும் தொடர்ந்து பங்களித்துள்ளனர். சில ஆளுமைகள் நேரடியாக வந்து ஆதரவு வழங்கி வலுப்படித்தியுள்ளார்கள்.
ஆனால் நீங்களெல்லாம் நினைத்திருந்தால் ஆயிரக்கணக்கில் திரண்டிருக்க இயலும். முகநூலில் ஜென்-ஜீ இளையொர்களுக்கு வகுப்பெடுக்கும் பலரை களத்தில் காணமுடியவில்லை. ஜென்-ஜீ இளையோர்களை விமர்சிப்பவர்களையும் காண இயலவில்லை. மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து செல்லும் போது நேரில் வந்திருந்து ஓரிரு மணி நேரம் அவர்களோடிருந்து ஆதரவு வழங்கினால் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வதை அறிந்தால், அரசும் செவிமெடுக்கும், காது முளைக்காத ஆளுநரும் கையெழுத்திட அழுத்தம் வரும்.
ஒரு போராட்டத்தை அரசு மட்டுமே பலவீனப்படுத்துவதில்லை, அமைதியாக கடந்து செல்லும் பலரும் தமது அமைதியான நிராகரிப்பினால் பலவீனப்படுத்துகிறார்கள். வாய்ப்பிருந்தால் மாலையில் சென்றாவது இவர்களை ஆதரியுங்கள்..
பெண்கள் உரிமைகளுக்கு எதிரான மதவாத-வலதுசாரி முழக்கங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.
முற்போக்கு தளமான தமிழ்நாட்டில் வெள்ளையின-ஐரோப்பிய-கிருத்துவ பெண் அடிமைத்தன கருத்தியல்களை தூக்கிச் சுமப்பது கண்டனத்திற்குரியது.
இதுவும் சங்கித்தன மத அரசியலும் வேறுபட்டதாய் இருக்க முடியாது.
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் எனும் சங்கிகளின் அரசியலும், குழந்தை சுமப்பதை தவிர்க்கும் உரிமையை பெண்களிடம் இருந்து பறிப்பதும் வலதுசாரி அரசியலே.
மதரீதியாக பெண்களை பண்டமாக, சொத்தாக, குழந்தைகளை உற்பத்தி செய்ய வேண்டியவர்களாகமாற்றற முனையும் மதவாத அரசியலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
இதை சபாநாயகர் முன்மொழிவது கண்டனத்திற்குரியது. இதைச் சொல்ல அவரைப் போன்ற ஒரு ஆணுக்கு உரிமையில்லை. இதுபோன்ற பெண் அடிமைத்தன பிற்போக்குத்தனமான மதவாத அரசியலை தவெக தலைவர்கள் தொடர்வது கண்டனத்திற்குரியது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் 'ஸ்டெர்லைட்' குறித்து ஐ.நா அவையில் பேசியதற்காக தேசதுரோக வழக்கில் கைதாகி வேலூர் சிறைக்கு அனுப்பட்ட நாள் ஆகஸ்டு-10.
அதன்பின் சுமத்தப்பட்ட 47 வழக்குகள், ரவுடிப்பட்டியல் இணைப்பு என பல பொய் வழக்குகள் அதிமுக, திமுக அரசுகளை கடந்து, தற்போது தவெக அரசிலும் தொடர்கிறது. இந்த சிறையும், வழக்கும் தாம் எம்மை உறுதியானவர்களாக மாற்றியது. இதே கைதின் பொழுது உபா (UAPA)உபா வழக்கு ஏவப்பட்டது. பொய்யாக ஜோடித்த வழக்கென நீதிமன்றத்தில் உடனடியாக நிரூபித்து அவ்வழக்கில் விடுதலை பெற்றேன்..அதாவது 07-07-2017ல் பாலஸ்தீனத்திற்கான ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 'தேசவிரோதமாக' பேசினேன் என உபா வழக்கை தொடுத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த (07-07-2017) நாளில் நான் புழல் சிறையில் 'மெரினா நினைவேந்தல்' வழக்கிற்காக குண்டர் சட்டத்தில் அடைபட்டிருந்தேன். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உரையாற்ற இயலுமென நாங்கள் எழுப்பிய கேள்வியில் அரசு வழக்கறிஞர் பதில் சொல்ல இயலாது நின்றார். நீதியரசர் விடுதலை செய்தார்.. மேலதிக வழக்குகளை குவித்து சிறப்பு CBCID வழக்குகளை ஏவினார்கள். அதிமுக அரசு ஏவிய வழக்குகளை திமுக அரசும் ரத்து செய்யவில்லை. தவெக அரசும் ரத்து செய்யப்போவதில்லை. ஆயினும் மேலதிக வழக்குகளை வாங்கிக்கொண்டே மே17 இயக்கத்தின் போராட்டம் தொடர்கிறது.
இந்த புகைப்படம் ' பெங்களூரில் இருந்து கைது செய்து வாகனத்தில் கொண்டு வந்து அதிகாலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக இறங்கிய தருணத்தில் தோழர்கள் எடுத்தது.
ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுகிறாரா? அல்லது தமிழை ஆங்கிலத்தோடு கலக்கிறாரா?இருமொழிகளையும் கலந்து பேசும் போக்கிற்கு எதிராக 'தனித்தமிழ்' இயக்கத்தவர்கள் நூறாண்டுகளாக செயல்பட்டுள்ளனர்.
நிதியமைச்சரின் ஆங்கில கலப்பு மொழிநடையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள இயலாதென்பது அவரது இயலாமையை காட்டுகிறது. இப்படியாக ஆங்கில கலப்போடு பேசுவதை Unique -தனித்துவமானது என்கிறார். மொழி கலப்போடு பேசுவது 'தனித்துவமானதல்ல.. அது மொழியை கொச்சைப்படுத்துவதாக ஆகும். ஓரிரு முறை எதார்த்த நிலைகளில் பேசுவது வேறு. தமிழ் மொழி தான் தமிழ்நாட்டரசின் மொழி எனும் நிலையில், அமைச்சர் பொறுப்பேற்பவர், தனது மொழி நடையை தகவமைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, ஒருமொழி நடையை தனித்துவமானது என்பது நகைப்பிற்குரியது.
அவரது கலப்பு மொழியை சுட்டிக்காட்டினால், அதை கவலையுடனும்,சுயவிமர்சனத்துடனும் ஏற்பது அவசியம். அவர் மக்கள் மன்றத்தில் பேசுகிறார், ஆகவே மக்களின் தாய்மொழியில் உரை நிகழ்த்தும் கடமை அவருக்குண்டு. அவரை அமைச்சராக்கிய மக்களின் மொழியை பேசவராது, இயலாதென்பது மாண்புக்குரியதல்ல.
முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் ஆங்கிலம், பிறமொழி கலக்காத தமிழில் பேச வேண்டும். அரசு நிர்வாகத்தில் தமிழே ஆட்சி மொழியாக, தொடர்பு மொழியாக அமையட்டும்.
சட்டசபையில் தனித்தமிழை பேசத்தெரியாதவர்களுக்கும், பேச இயலாதவர்களுக்கும் தனியே பயிற்சி முகாமை தவெக அரசு உருவாக்கட்டும். உலகளவில் அவரவர் தேசத்தில் அவரவர் தாய்மொழியிலேயே அரசு அலுவலகங்களில் உரையாற்றுகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
அமைச்சர்கள் தொடர்ந்து இருமொழி கலப்பாக பேசுவார்களெனில் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.
கியூபாவின் அரசியல் முன்னேற்த்திற்கான முக்கியமான நான்கு தூண்களை பற்றி தோழர் அமரந்த்தா "ஃபிதல் காஸ்த்ரோ : புதிய உலகின் சிற்பி" நூலில் குறிப்பிட்டதை தோழர் ஜி.மஞ்சுளா அவர்கள் விளக்கி உரையாற்றினார்
#நிமிர்#மே17இயக்கம்#TMG#புத்தகவெளியீடு
" கியூபாவின் மருத்துவ சர்வதேசியம் " நூல் வெளியீடு "
கியூபாவின் மக்களக்கான மருத்துவ சேவை பற்றியும், இன்றைய உலக முதலாளிதுவ மருத்துவ கொள்ளை பற்றி விளக்கவுரையை நிகழ்த்தினார் தோழர் மருத்துவர் விஜய் விக்ரமன் அவர்கள்..
#நிமிர்#மே17இயக்கம்#TMG#புத்தகவெளியீடு
பிடல் காஸ்ட்ரோ-நவீன உலகின் சிற்பி எனும் தோழர் அமர்ந்த்தா எழுதிய நூலை தோழர் சிவக்குமார் வெளியிட பெற்றுக்கொண்டு தோழர் மஞ்சுளா உரை நிகழ்த்தினார். அடுத்ததாக 'க்யூபாவின் மருத்துவ சர்வதேசியம்' நூலை தோழர் சிவக்குமார் வெளியிட மருத்துவர் விஜய் விக்கிரமன் பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் சிறப்புரை செய்பவர்கள், ஆசிரியர்களான தோழமைகள் அமரந்த்தா, பாலச்சந்திரன், கோச்சடை
பங்கெடுத்து சிறப்பு செய்கிறார்கள். நிகழ்வில் மரியாதைக்குரிய தோழர்கள் மூத்த ஆளுமைகளான மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கி.வெங்கட்ராமன், மூத்த பேராசிரியர் சரஸ்வதி, எழுத்தாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கெடுத்து சிறப்பித்து கொண்டிருக்கிறார்கள். இரவு 8 மணி வரை நிகழும் இந்த விழாவில் வாய்ப்புள்ள தோழமைகள் அவசியம் பங்கெடுக்க வாருங்கள்.
தமிழ்நாடு இதுவரை அறியாத லத்தீன் அமெரிக்க மார்க்சிய சிந்தனையாளர் 'ஹோசே கார்லோஸ் மரியதெகி' அவர்களது சிந்தனைகள், கட்டுரைகள், அவரது மார்க்சிய ஆய்வுலகம் குறித்த நூல்களை மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், தோழர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழ்த்தேசிய பேரியக்க தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட இந்நூல்களைக் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் விஜயசங்கர் அவர்கள் விரிவான சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலதிகமாக இன்னும் இரு நூல்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
#பிடல்காஸ்ட்ரோ_நூற்றாண்டுவிழா
சாதி மத வேறுபாடில்லாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர் புரிந்த தீரன் சின்னமலை, வீரன் பொல்லான், இவர்களின் தோழன் திப்புசுல்தான் எனும் கூட்டமைப்பு, தமிழினத்தின் அடக்குமுறை எதிர்ப்பு அரசியலை முன்னகர்த்தியது. குடியானவர்களின் சாதி-மதம் கடந்த எழுச்சியாகவே பாளையக்காரர்களின் புரட்சி நடந்தது என்பதை மே17 இயக்கம் தொடர் மாநாடுகளின் வழியே கடந்த 5 ஆண்டுகளில் பேசியது. பாளையக்காரர்களின் போராட்டத்தின் உழவர் சமூக பின்னனியையும், கிழக்கிந்திய கம்பெனியின் கார்ப்பரேட் ஏகாதிபத்திய சுரண்டல்களையும் எதிர்த்த சாமானியர்களின் அணி திரட்சியையும் மே17 இயக்கம் தனது மாநாடுகளில் வெளிப்படுத்தியது. கோவை, ஈரோடு, அவினாசி, திருப்பத்தூர், வேலூர், ஆம்பூர், திருச்சி,குடியாத்தம் என பல நகரங்களில் மாநாடுகளை நடத்தி மக்களை அரசியல் வயப்படுத்தியது. ஆங்கிலேயரின் சாதிரீதியான பிரித்தாளும் சூழச்சி, தீவிர உளவுபார்த்தல், அதீதமான சுரண்டல் வரி, நிலஅபகரிப்பு, கொடூரமான சித்திரவதை என பலவற்றை கடந்து வெகுமக்கள் தலைவர்களாக, படைவீரர்களாக பங்கெடுத்து நடத்திய புரட்சி என்பது இந்திய துணைக்கண்டத்தில் முதன்மையானது. ஆண்ட பரம்பரைகள் ஒதுங்கி கொண்டும், காட்டிக்கொடுத்தும் இருந்த சமயத்தில், சாமானிய உழவர்குடிகளாக இருந்த மக்கள் சாதிகடந்து ஒன்று திரண்டனர். வெகுமக்கள் படைவீரர்களாகினர், மசூதிகள் ஆயுதக்கிடங்குகளாக மாறியது, ஏழை பாட்டளிகள் நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி குண்டுகளையும், பீரங்கிகளையும் எதிர்கொண்டனர். அதிநவீன கருவிகளையும், சாதி ரீதியான பிளவுகளையும் கொண்டே வெள்ளையர்கள் வெற்றிகண்டனர். வெகுசன ஆதரவில்லாமல், பாளையக்காரர்கள் 20,000-30,000 படைவீரர்களை திரட்டியிருக்க இயலாது. முறையான பயிற்சி, இராணுவ ஒற்றறிதல் போதாமை, நிதி பற்றாக்குறை இருந்த போதிலும் சனநாயகத்தன்மை நோக்கி இவர்கள் முன்னகர்ந்தார்கள். பிரஞ்சுபுரட்சியின் விழுமியங்கள் இவர்களுக்கு அறிமுகமாயின. திப்பு சுல்தானின் பிரஞ்சு புரட்சியின் முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மீதான ஈர்ப்பு, பிரன்சு தேச முற்போக்கு ஜேக்கோபியன் மன்றத்துடனாக உறுப்பினராக இணைதல், அமெரிக்க புரட்சிக்கு ஆதரவளித்தல், பிரஞ்சு புரட்சியின் தூதர்களை சந்தித்தல், பிரான்சு தேசத்திற்கு தூதுவர்களை அனுப்புதல் என்று வெகுசன-மக்கள் அரசியலை கட்டியெழுப்ப முயன்றனர் திப்புசுல்தான், மருதுபாண்டியர், தீரன் சின்னமலை, கருப்பையா சேர்வை போன்றோர். இந்த வெகுசன திரட்சி நூறாண்டுகளுக்குள்ளாக வெகுமக்கள் சனநாயக அமைப்புகளாக உருப்பெற்றன என்பது கவனத்திற்குரியது. முடியாட்சியின் மீதான அவநம்பிக்கையை மக்களிடத்தில் விரிவுபடுத்தி சாமானியர்கள் அரசியல் அதிகாரத்தை கேள்வி எழுப்ப இயலும் என்பதை சாத்தியபப்டுத்தினர் இப்போராளிகள். இவற்றையெல்லாம் மிக விரிவாக மே17 எடுத்துரைத்து மாநாடுகளாக்கி மக்களிடத்தில் கொண்டு சென்றது. வேலுநாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பொல்லான், ஒண்டிவீரன், புலித்தேவன், மயிலப்பன், முகம்மது ஹாசம், ரோனுல்லாகான், புத்தேமுகம்மது, விருப்பாச்சி கோபாலர் என மக்கள் தலைவர்களாக இயங்கினர். மே17 இயக்கத்தின் இடையறா பரப்புரையின் காரணமாக இந்துத்துவ அரசியல், இந்த போராளிகளை தன்வயப்படுத்தும் முயற்சிகளை முறியடித்தது. திருச்சியில் நடத்திய ஜம்பு தீவு பிரகடன மாநாடு என்பது மருதுபாண்டியர்களின் தென்னிந்திய விடுதலை முழக்கமாக அமைந்தது என்பதை மே17 இயக்கம் வரலாற்று தகவல்களோடு விளக்கியது. எமது பரப்புரைக்கு எதிராக RSS நேரடியாக களமிறங்கி பொதுக்கூட்டங்களை நடத்தியது. ஜம்பு பிரகடனத்தை அகண்ட பாரதத்திற்கான அறிவிப்பு என்றும், பாளையக்காரர்கள் கிருத்துவ மதத்திற்கு எதிராக போர் புரிந்தார்கள் எனவும் திரித்திட முயன்றதை முறியடித்தது மே17 இயக்கம். எச்.ராஜாவை கொண்டு ஜம்பு தீபகற்ப பிரகடனத்தை சனாதன பிரகடனம் என்று திரிக்க்ச் முயன்றார்கள். இதை முறியடித்து எழுச்சியுடன் திருச்சி சறுக்குப்பாறை திடலில் மே17 மாநாடு நடத்தியது. சனாதன அரசியலை எதிர்கொள்ள வரலாறு, பண்பாட்டு தளத்திலான முயற்சிகள் அவசியம். இவ்வாறாக 'வரலாறு மீட்பு மாநாடுகளை கிட்டதட்ட 11 மாநாடுகளை நடத்தியுள்ளது மே17 இயக்கம்.
இந்த வரலாற்று தகவல்களை ஆய்வுகளின் வாயிலாக வெளிபப்டுத்திய அறிஞர் பேராசிரியர் ராஜய்யன் அவர்களுக்கு வாழ்நாள் விருதான 'அருந்திறல் தமிழர்' விருதினை அளித்து மகிழ்ந்தோம். 96 வயதை கடந்தும், தமிழ் சமூகத்தால் அங்கீகரிக்கடாத ஆளுமையாக மதுரையில் வசித்து வருகிறார்.
மாநாடு நடத்த பெரும்பொருட்செலவினை சுமக்க இயலாமல் இருந்த காரணத்தினால் தொடர்ந்து நடத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம். என்றாலும் எமது பரப்புரை பணிகள் தொடரும். சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை வென்றெடுக்க போராடிய அனைத்து போராளிகளுக்கும் மே17 இயக்கத்தின் வீரவணக்கம், புகழ் வணக்கம்.
நடக்க இருக்கும் தொகுதி மறுவரையில் மாற்றத்திற்குள்ளாவது தொகுதி எண்ணிக்கை மட்டுமல்ல, தொகுதியின் தன்மையும் மாற்றப்படுகிறது. அதாவது, உதாரணமாக முஸ்லீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகள் உடைக்கப்படும், முஸ்லீம்கள் இரண்டு, மூன்று தொகுதிகளுக்குள்ளாக பிரிக்கப்படுவார்கள். இதனால் பாஜக எதிர்ப்பு தொகுதிகள் அழிக்கப்பட்டு மறுநிர்மாணம் செய்யப்படும். இதை ஏற்கனவே அஸ்ஸாம், காசுமீரில் நடைமுறை செய்துள்ளார்கள். அஸ்ஸாமில் இதனால் பாஜக எளிதாக வெற்றிபெற இயலுகிறது.
இதை வைத்து பாஜக நிரந்தரமாக அதிகாரத்தில் தக்கவைக்கப்படும். குறைந்தது அடுத்த 10 ஆண்டுகள் மோடி பிரதமராக நீடிக்க வாய்ப்பு மிக மிக அதிகம். மோடி ஆட்சியில் இருக்கும் வரை, பாஜக அதிகாரத்தை கட்டுப்படுத்தும்வரை தமிழ்நாட்டுக்கோ, தமிழருக்கோ, தமிழ் மொழிக்கோ விடிவு கிடையாது.
ஆகவே 'தொகுதி மறுவரையறை' என்பதில் ஒருபகுதி 'தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம்', மறுபாதி 'பாஜகவின் நிரந்தர அதிகாரம்'... தமிழ்நாட்டிற்கான விகிதத்தை குறைக்கமாட்டோம் என சொல்லிக்கொண்டே, பாஜக தன்னை நிரந்தரமாக ஆட்சியில் அமர்த்திக்கொள்ளும் வகையில் வட இந்தியாவில் தொகுதிகளை மறுகட்டுமானம் செய்துகொள்ளும். முஸ்லீம்கள் நிரந்தரமாக தமது பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்பார்கள். வடகிழக்கு மாகாணங்கள், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில கட்சிகள் பிரதிநிதித்துவத்தை இழக்கும்.
இதைத்தான் Fair Delimitation செய்யும்.
பாஜக என்றுமே தமிழின விரோதியே. இதில் ஒருபோதும் மாற்றம் இடையாது. 'தொகுதி மறுவரையறை' என்பது 'மோடி-பாஜக' நிரந்தரமாக ஆட்சி-அதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சியே. இதில் கடந்த காலத்தைப் போல இந்தியாவிற்கே திமுக வழிகாட்டியாக நின்று, இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். Fair Delimitationஎன்பது பாஜக சார்பான நிலைப்பாடகவே சென்றுமுடியும். பாஜகவின் கனவை வெற்றிபெறச் செய்யாதீர்கள்.
ஆகவே Fair Delimitation என மே17 இயக்கத்திடம் பாடம் எடுக்கும் திமுக நண்பர்கள், தமது நிலைப்பாட்டை பரிசீலனை செய்துகொள்ளுங்கள். தமிழர் நலனை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள், கட்சி நலனையல்ல.
உங்களிடம் இருந்து நேர்மறையான முடிவு வருமென எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் பாஜக எதிர்ப்பின் தலைமைத்துவம் தமிழர்களிடமே உள்ளது. இதை எக்காலமும் கைவிடமாட்டோம் என உறுதி பூணுவோம்.
*ஹோசே கார்லோஸ் மரியதெகி*
கேள்விபட்டிருக்கிறீர்களா?
பிடல் காஸ்ட்ரோவுக்கும், சேகுவேராவ்ற்கும், அலெண்டாவுக்கும், சாவேஸுக்கும் முன்னோடியாக, வழிகாட்டியாக இயங்கிய மாபெரும் மார்க்சிய சிந்தனையாளன். லத்தீன் அமெரிக்காவின் தனித்தன்மையையும், சர்வதேசிய புரட்சியையும் இணைக்கும் கூறுகளையும், தனித்துவமான புரட்சிகர நடவடிக்கையையும் சிந்தித்த 'பெரு' நாட்டின் மார்க்சிய சிந்தனையாளன்.
இவரது நூல்களை, பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தினத்தில் வெளியிடுவதை விட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும். அதுவும் பிடல் காஸ்ட்ரோ செய்த சாதனைகள், சோசலிச மருத்துவ கட்டமைப்புகள் குறித்த நூல்களையும் சேர்த்தே கொண்டு வருவது மேலதிக உற்சாகத்தையல்லவா கொடுக்கிறது.
அதுவும்
முதன்முறையாக ஹோசே கார்லோஸ் மரியதெகியின் படைப்புகள் தமிழில் வெளியாகின்றன. அண்ணா நூலகத்தில், ஞாயிறு 09-08-2026) மாலை 3 மணியளவில் (8மணிக்குள்ளாக முடிக்க வேண்டுமெனும் கட்டுப்பாடு உள்ளதால்) சரியாக தொடங்க இருக்கிறது.
எழுத்தாளர்கள் அமரந்த்தா, எஸ்.பாலச்சந்திரன், சே.கோச்சடை ஆகியோர் இப்படைப்புகளை கொடுத்துள்ளார்கள். அவர்களோடு பிற ஆளுமைகளும் உரையாடுகிறார்கள். சிந்தனைக்கு விருந்தளிக்கும் மார்க்சிய தோழமைகளின் உரைகளோடு மாலைப் பொழுது கழிப்போம். வாருங்கள்.
பாஜக எங்கே இருக்கிறதென மாண்புமிகு அமைச்சர் கேட்கிறார்?
பாஜக எங்கும் இருக்கிறது.
நீதிபதிகளாக இருக்கிறது.
அதிகாரிகளாக இருக்கிறது.
ஆளுநராக இருக்கிறது.
காவல்துறையாக இருக்கிறது.
திருப்பரங்குன்ற தீபத்தூணாக இருக்கிறது.
நீட் தேர்வாக இருக்கிறது.
மேகேதாட்டு அணையாக இருக்கிறது.
தனியார்மயமாக இருக்கிறது.
திருப்பதிக்கு பட்ஜெட்டை எடுத்துபோவதில் இருக்கிறது.
ஜெபமாலையை பட்ஜெட்டோடு சேர்த்து தூக்கிவருவதில் இருக்கிறது.
இந்த பட்டியல் நீளமானது..
பாஜக என்பது வெறும்கட்சியாக இல்லை, பாசிசமாக, அனைத்து துறைகளிலும் பாயாசமாக அமர்ந்திருக்கிறது.
கவனமாக செயல்படவில்லையெனில்,
பாஜக பயங்கரவாதம் தலைவிரித்தாடும். திருப்பரங்குன்றத்தில் உறுதியாக இல்லையெனில் 'பாய்சன் பாயாசம்' பந்திக்கு வரும்.
1K Followers 1K Following🔥 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🔥 ♥️♥️♥️உயிர் இருக்கும் வரை @actorvijay… மூச்சு இருக்கும் வரை @msdhoni… என்றும் என்னுடன்!♥️♥️♥️
62 Followers 657 FollowingGOAT - Dedicated to the one & only Thalapathy Vijay 🔥 | Updates, photos, and fan love | Celebrating the star who inspires millions! #Thalapathy #VijayFans #TVK
6K Followers 226 FollowingAlways A Comarde |SFI State Secretary| Political talks | Love to comrades| Invitee Member of the @tncpim State Committee |Proletarians all over the world ,Unite
12K Followers 13 Followingவெற்றி நியூஸ்| Vetri News
Welcome to the Official account
📰 Political News & Public Affairs
உண்மையை உரக்கச் சொல்லும் தமிழ்நாட்டின் குரல்
15K Followers 707 FollowingJournalist | Times of India | PhD Research Scholar @ UNOM | Actor | Author Crime-Genre Poem Book Chilled Love | Humanitarian Award winner 2021 | Psephologist |
41K Followers 548 FollowingDoctor | Ex-IRS | Humanist | Minister for Health, Medical Education and Family welfare - Govt of Tamil Nadu | பொதுச் செயலாளர் (கொள்கைப் பரப்பு)-தவெக.
177K Followers 908 FollowingC.T.R.Nirmal Kumar BE, LL.B, MA | TN Minister for Energy Resources & Law | MLA Thiruparankundram | Joint General Secretary @ TVK Party
33K Followers 77 FollowingThe Official Virtual Warriors Team for Thalaivar @TVKVijayHQ | TVK - தமிழக வெற்றிக் கழகம்| #TVKVijay | பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் | Fan page
3K Followers 247 Followingவிருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் |
மாவட்ட கழகச் செயலாளர் |
விருதுநகர் கிழக்கு மாவட்டம் | தமிழக வெற்றிக் கழகம் |
அஞ்சுவதும் அடிபணிவதும் தளபதிக்கு மட்டுமே 🙏
72K Followers 838 FollowingSenior Editor & Anchor on @indiatoday... Catch me every weekday evening on Super 6. Tweets/retweets personal. ✉️✉️[email protected]
48K Followers 41 FollowingIndia's Leading Consumer Data Intelligence Company, with a vision to connect & resolve problems of all 250 million Indian households.
894 Followers 161 Followingஆளும் கட்சிக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்கள் உதவியுடன் இயங்கும் அதிகாரப்பூர்வமற்ற குழு
//UNOFFICIAL ACCOUNT//