இந்தியாவில் மாநில முதல்வர்களுக்கு சுதந்திரதினமன்று கொடியேற்றும் உரிமை இல்லை. ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். 1974-ம் ஆண்டு, முதல்வராக இருந்த கலைஞர், ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்.
மாநிலத்துக்குச் சுயாட்சி, தனிக்கொடி என்று கலைஞர் அரசியல் போராட்டத்தை தொடங்கியதன் விளைவால் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றும் உரிமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மாநிலங்களுக்கு வழங்கினார். அதற்கு முன் கடந்த 1973-ம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15-ம் தேதியும், குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடிஏற்றி வந்தனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக நின்றிருக்க, மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவது ஜனநாயகமாக எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி உரிமையை மீட்டவர் கலைஞர்.
கடந்த 1973-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர், மாநிலங்களில் முதல்வர்கள் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று புறக்கணிக்கப் படுகின்றனர் என்று புகார் அளித்தார். மாநிலத்துக்குச் சுயாட்சி வேண்டும், மாநிலங்களுக்கு தனிக்கொடி வேண்டும் முழுக்கமிட்டார். அது மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய அப்போதே, ராஜமன்னார் தலைமையிலான குழுவை கடந்த 1969-71ம் ஆண்டு அமைத்தார்.
இந்தக் குழுவில் ஏ.லட்சுமண முதலியார், சந்திரா ரெட்டி உள்ளி்ட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக்குழு 1971-ம் ஆண்டு மே 27-ம்தேதி 383 பக்க அறிக்கையை அளித்து. அதில் மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை, மாநில அரசுகளை அதிகமாக்கி, பரவலாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
நாட்டிலேயே முதல்முறையாக அப்போது இதுபோன்ற குழுவை நியமித்தது கலைஞர் ஒருவர் மட்டுமே. அதுமட்டுமல்லாமல், முரசொலி நாளேட்டின் விழாவில், பேசிய அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன், மாநில சுயாட்சி குறித்துப் பேசினார். சுதந்திரத்தினத்தன்று ஏன் மாநில முதல்வர்களுக்குத் தேசியக்கொடி ஏற்றும் உரிமை வழங்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி வியப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் கலைஞர் விடுத்த கோரிக்கை உள்ளிட்டவற்றால், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு அறிக்கையைவெளியிட்டார். அதில் தேசியக்கொடியை முதல்வர்கள் ஏற்றலாம் என்று அறிவித்தார்.
இதையடுத்து கடந்த 1974-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அந்த விழாவுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்தார் கலைஞர். புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக கொடியை ஏற்றிய முதல்வர் எனும் பெருமையை கலைஞர் பெற்றார்.
அதன்பின் நடந்த ஊடகங்கள் சந்திப்பில் பேசிய கலைஞர், மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் குறித்தும், அனைத்து மாநிலங்களுக்கும் அதன் அவசியம் குறித்தும் விவரித்தார். இது எங்களுக்குக் கட்சிக்காக மட்டும் செய்யவில்லை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் ஆதரவாகப் போராடியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் அவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நாட்டின் சுதந்திர தினவிழாவின்போது நாட்டின் கொடியை ஏற்ற முடியாமல் இருந்து வந்த நிலையை தனது வலுவான கோரிக்கையால் சாதித்துக் காட்டியதன் மூலம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தார் கலைஞர்.இந்த வரலாற்று நிகழ்வு நடந்து ஆறு வருடங்களுக்கு பிறகு 1980-ல்தான் இப்ப கருத்து சொல்லும் அருண்ராஜே பிறக்கிறார்.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!!!
Copy paste.
3 Followers 299 FollowingEmpowerment Of Women is a necessity. Promoting Empowerment of Women In Every Walk of A Woman. Through our Posts We Are Generating Women Energy. Women Valued. ☺️
13 Followers 64 FollowingI have all dating app link girls vedios and phots and number if u want dm me not free everything is for R.S other don't disturb